Monday, 9 August 2021

தீய பழக்கங்களில் இருந்து விடுபடமுடியுமா?

Click Title or Image to read the book

தீய பழக்கங்களில் இருந்து விடுபடமுடியுமா?

Author : Sri Bhagavath 

புத்தகச்சுருக்கம் :
 
இந்நூலின் வாயிலாக தீயபழக்கங்கள் என்பது கொலை, கொள்ளை, போதை பொருட்களை உபயோகித்தல் போன்ற பெரிய பாதிப்பை குறிப்பிடுவன மட்டுமல்ல..நமது அன்றாட வாழ்வில் "இன்ப நாட்டத்தை" நோக்கி நாம் செல்ல நமக்கு சிறு நேர இன்பநுகர்ச்சியை கொடுக்க கூடிய பழக்கவழக்கங்கள் அனைத்துமே தீயபழக்கங்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
நமது வலி, வருத்தம், இயலாமையை போக்கிக்கொள்வது தான் தனக்கான வெற்றி என எண்ணி நாம் ஏதேனும் ஒரு தீயபழக்கத்தை (புகை பிடித்தல், குடி, etc...) நாடி மனதை மாற்றுகிறோம். அதில் வெற்றியும் காண்கிறோம்...
ஆனால் காலப்போக்கில் அந்த பழக்கம் நம்மை அடிமைப்படுத்தி விடுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தீய பழக்கத்தில் இருந்து வெளிவருவது தான் தனக்கான வெற்றி என அதோடு போராடுகிறோம்..
அதிலிருந்து வெளிவரவும், அதே தீயபழக்கத்துக்கு ஆதரவாகவும் நமது மனம் மாறி மாறி போராடும் படிநிலைகளை அந்த நேரத்து மனநிலையை ஆசிரியர் சிறப்பாக கூறியுள்ளார்.
புத்தகத்தை படித்து முடிக்கும் போது நாம் புரிந்துகொள்வன :
எவ்வாறு தீயபழக்கத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம் ? :
- எல்லாவற்றிற்கும் நமது மனநிலையும், நாம் அனைத்திலும் எதிர்பார்க்கும் இன்பநுகர்ச்சியும் தான் காரணம்.
- இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி அனைத்தும் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகள். அதில் தோல்வி, இழப்புகள், துன்பங்கள் வருவதும் இயற்கை தான். அந்த நேரத்தில் நாம் செயலற்று நிற்பதும் சில விஷயங்களை மாற்ற முடியாமல் அப்டியே ஏற்றுக்கொள்வதும் இயற்கை தான். ஆனால் அத்தகைய நேரத்தில் நமது இயலாமையை நாம் நிதர்சனம் என்று ஏற்க மறுக்கிறோம்.
அதிலிருந்து வெளிவர துடிக்கிறோம். இன்பமாக வாழ்வதும், தன்னை ஆட்கொள்ளும் அந்த உணர்வுகளை வெற்றிகொள்வதும் தான் தனக்கு சாதனை என்று கருதுகிறோம். இது தான் தீயபழக்கத்திற்கு வித்திடுகிறது என ஆசிரியர் கூறுகிறார்.
தீயபழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது? :
- எந்த ஒரு விஷயத்தை பற்றிய ஆழ்ந்த புரிதலும், அதன் செயல்பாடுகளின் தன்மையும் உணர்ந்து கொண்டால் அதோட சுமூகமாக பயணிப்பது எளிதாகிவிடும். (இது தீயபழக்கத்தை கையாள்வது மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்.)
- நமது வாழ்வில் நிகழும் அனைத்து விஷயங்களையும் அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு சரிசமமாக நடத்தும் பாங்கு. எதிர்பார்ப்புகள் இல்லாத, வெற்றியும், தோல்வியும் ஒரே போல பார்க்கும் மனநிலை தான் அகத்துறவு என குறிப்பிடப்படுகிறது.
- அகத்துறவு தான் இன்பநாட்டத்தை சீரமைக்க வல்லது. அப்டி ஒரு புரிதல் வந்துவிட்டால் நம்மை காயப்படுத்தும் இயலாமையும், அடிமைப்படுத்தும் தீயபழக்கமும், அது தரும் சிறு சந்தோஷமும் அனைத்துமே ஒன்று தான்.
இறுதியாக புத்தகத்தை பற்றி :
ஆங்காங்கே சிறு சிறு கதைகள், நிகழ்வுகள் குறிப்பிட்டு சொல்வது இருந்தாலும் தீயபழக்கங்களில் இருந்து விடுபடுவது, ஏன் அதை நாடுகிறோம் என சில இடங்களில் ஏற்கனவே கூறியதையே மீண்டும் கூறுவதை குறைத்திருக்கலாம். இருப்பினும், முழுதாக படித்து முடித்தபின் ஒரு தெளிவு நிச்சயம் கிடைக்கும்.
தீயபழக்கம் என்பது எது? எது நம்மை அதற்கு வித்திடுகிறது? அதை கையாளும் போது நமது மனநிலை எப்படி இருக்கும்? எப்படிபட்ட மனநிலை தீயபழக்கங்களை கடந்து வர வழிவகுக்கும் என தெளிவாக கூறிவிட்டார்.
தெளிவான புரிதலை கொடுக்கும் நல்ல படைப்பு.
நன்றி.


Tuesday, 25 February 2020

உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்

உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்

https://drive.google.com/file/d/1qlQQ_8qUE6VSS6L7gHcn3p04Vx60Oxs-/view?usp=sharing

தன்னை உணராமல் தவறான துணையை தேர்ந்தெடுக்கும் நாயகன். தன் மனம் அறியாமல் அவனுக்கு உதவி செய்யும் நாயகி. எதிர்பாரா சூழ்நிலையில் இவர்களை ஒன்றாக இணைக்கும் விதி. இம்மூவருள் வெல்ல போவது யார்? விதியின் வல்லமையில் தன் மனம் உணர்வானா? குறும்பை விடுத்து குழப்பத்தில் திளைக்கும் நாயகியின் மனதில் அந்த கள்வன் தடம் பதிப்பானா? என்பதே "உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்" இந்த கதையின் கரு.

Recent Viewed Posts